Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூங்கும் பொது அருகில் மொபைலை வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

Issues by sleeping with your cell phone - Lifestyle News in Tamil

Issues by sleeping with your cell phone - Lifestyle News in Tamil

தூங்கும் பொது அருகில் மொபைலை வைத்துக் கொள்ளும் பழக்கமுள்ளவரா? கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்

மொபைல் போன் தீமைகள்

உலகமே உள்ளங்கையில் என்று பெருமை கொள்ளும் வகையில் ஒவ்வொருவரின் கையிலும் இன்று சுமார்ட் போன் வந்து விட்டது. இன்றைய உலகில் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தாமல் யாரும் இல்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைலே உலகம் என்று தான் இருந்து வருகின்றனர்.

மொபைலை அதிகம் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் என்பதை அறியாமலே அவர்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் தூங்கும் போது பக்கத்தில் போன் இருந்தால் தான் தூக்கமே வரும் என்பார்கள். அவர்கள் போன்றவர்கள் முக்கியமாக அதன் விளைவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பதிவை படித்த பிறகாவது போனை தூங்கும் போது பக்கத்தில் வைக்காமல் இருங்கள்.

உறங்கும் போது அருகில் போன் வைத்திருப்பதால் வரும் தீமைகள்

இரவில் தூங்கும் போது மொபைல் போனை பக்கத்தில் வைத்தும் தூங்க கூடாது. அதே போல போனை தலையணை அடியிலும் வைத்து தூங்க கூடாது. இயல்பாக போனிலிருந்து வரும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். இந்த கதிர்வீச்சானது உடலில் தேவையில்லாத செல்களை தூண்டும். இதனால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வரும்.

இதுமட்டுமில்லாமல் இவ்வாறு தூங்கும் போது போன் அருகில் இருப்பதால் தலைவலி, தூக்கமின்மை, கனவுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

தூங்கும் நேரத்தில் போனை எப்படி வைக்கலாம்

ஒவ்வொருவரும் இரவில் தூங்கும் போது போனில் இருக்கும் Network connection off செய்து விட்டு தூங்க வேண்டும்.

குறிப்பாக நீங்கள் தூங்கும் இடத்திற்கும் போனுக்கும் கொஞ்ச இடைவெளி இருக்க வேண்டும்.

பேண்ட் பாக்கெட் அல்லது சட்டை பாக்கெட்டில் போனை வைக்கலாமா! 

ஆண்கள் பலரும் வழக்கமாக போனை பேண்ட் பாக்கெட்டில் தான் வைப்பார்கள். இந்த மாதிரி பேண்ட் பாக்கெட்டில் போனை வைப்பது உடல் உறுப்புகளை பாதிக்க செய்யும் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இவ்வாறு வைக்கும் போது போனிலிருந்து வரும் வெப்பமானது உடலில் இருக்கும் செல்களை அழிக்கும். முக்கியமாக ஆண்கள் பேண்ட் பாக்கெட்டில் போனை வைப்பதால் ஆண்மை குறைபாடு பிரச்சனை ஏற்படும்.

அடுத்ததாக போனை சட்டை பாக்கெட்டில் வைப்பதால் போனிலிருந்து வரும் வெப்பம் மன அழுத்தம் பிரச்சனை ஏற்பட காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் உங்களை தொடர்ந்து சோர்வு நிலையிலே வைத்திருக்கவும் செய்கிறது.

அதிக நேரம் போன் பயன்படுத்தலாமா.!

அதிக நேரம் போன் பயன்படுத்தினால் மலச்சிக்கல், ஆண்மை குறைபாடு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசகர்களே இதை படிக்கும் நீங்கள் இனிமேலாவது தூங்கும் போது போனை அருகில் வைக்காமல் தூங்குங்கள். குறிப்பாக போனை அதிக நேரம் பயன்படுத்தாதீர்கள்.

Issues by sleeping with your cell phone

Exit mobile version