Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இணையவழி படிப்பு – செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னை ஐஐடி அறிவிப்பு!!

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி பி.எஸ்சி. பட்டப்படிப்புக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் பாடப்பிரிவில் இளநிலை இணையவழிப் படிப்பை 2020-2021ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

ஐஐடி போன்ற உயர்கல்வி நிலையங்களில் படிப்பதற்கு ஜேஇஇ என்ற தேசிய அளவிலான நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தியுள்ள இணையவழி இளநிலைப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை.

இந்த இணையவழிப் படிப்பு அடிப்படைப் பட்டம், டிப்ளமோ, இளநிலைப் பட்டப்படிப்பு என மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அதாவது, எந்த நிலையிலும் படிப்பிலிருந்து மாணவர்கள் வெளியேறி, அதற்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது வேறு கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இந்த இணையவழிப் படிப்பில் சேர்ந்து படிக்க முடியும். பி.எஸ்சி (ஆன்லைன் புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்) இணையவழி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version