Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திருமணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை! குழந்தை பெற்று கொடுங்கள் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

It doesn't matter if you're not married! Give birth to a child, the government announced!

It doesn't matter if you're not married! Give birth to a child, the government announced!

திருமணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை! குழந்தை பெற்று கொடுங்கள் அரசு வெளியிட்ட அறிவிப்பு!

உலகில் அதிக அளவில் மக்கள் தொகையை கொண்ட நாடாக இருப்பது சீனா தான்.அதற்கு அடுத்ததாக இந்தியா உள்ளது.இந்நிலையில் இந்தியாவில் உள்ள சிக்கிம் என்ற மாநிலம்  தான் குறைந்த மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக உள்ளது.அதனால் இந்த மாநிலத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.அதன் காரணமாக அரசு அதனை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக அரசு துறையில் பணிபுரிந்து வரும் பெண்கள் இரண்டாவதாக குழந்தை பெற்று கொண்டால் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இரண்டு குழந்தைகள் பெற்ற பெண்கள் மூன்றாவதாக குழந்தை பெற்றால் மீண்டும் அவர்களுக்கு சிறப்பு ஊதியம் உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டுகளில் சீனாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 60ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. மேலும் அண்மை காலமாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகின்றது.

இந்நிலையில் சீனாவில் மக்கள் தொகையை பெருக்க அந்நாட்டு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்தவகையில் முன்னதாகவே உள்ள திட்டத்தின் அடிப்படையில் ஒரு தம்பதியினருக்கு கட்டாயமாக ஒரு குழந்தை இருக்க வேண்டும் என்ற திட்டம் தளர்த்தப்பட்டு மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் என அனைவரும் எத்தனை குழந்தை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version