சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்
அதிமுக ஐயப்பன்: உசிலம்பட்டி தொகுதியில் இருக்கின்ற 58 கிராம கால்வாயை சிமெண்ட் கால்வாயாக கற்றுத் தர வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: இந்தத் திட்டம் கருணாநிதி ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது ஆனால் 25 வருடங்களாக முழுமை பெறாமல் இருக்கிறது உறுப்பினர் நல்லதொரு யோசனையை தெரிவித்துள்ளார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி: பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு ஏரிகளுக்கு வேலி அமைத்தால் மீண்டும் ஆக்கிரமிப்பு வராமல் தடுக்கலாம். வீடுகள் இடிக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அவர்களுக்கு விளக்கு வழங்கப்படுமா? ஏரிகளை தூர் வாரும்போது ஏரி தொடர்பான விவரங்களை அறிய அளவீட்டு கருவி அமைக்கப்படுமா?
துரைமுருகன்: ஏரிகளை தூர் வாரவே படாத பாடு பட வேண்டியதாக இருக்கிறது. வேலி அமைக்க நிதிக்கு எங்கே செல்வது ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார்கள். அதனை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதா? பிச்சாண்டியின் கோரிக்கையை நிறைவேற்றுவதா? என்று எனக்கு தெரியவில்லை என தெரியவில்லை.
பொது இடங்களை ஆக்கிரமிப்பு செய்வது என்பது ஒரு வியாதி இது மக்களிடையே வளரக்கூடாது குறிப்பாக நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் கண்டிப்பாக ஆசைப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது இவ்வாறு சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது.