Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

Kamal Haasan Criticise New Parliament Building

Kamal Haasan Criticise New Parliament Building

இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் – கமல்ஹாசன் விளாசல்

இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்’ என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு புதியதாக ஆரம்பிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடந்து முடிந்தது.வழக்கம்போல் இந்த தேர்தலிலும் ஆங்கங்கே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டன.அந்தவகையில் உத்திரமேரூர் பகுதியில் கள்ள ஓட்டு போட துணிந்தவர்களை எதிர்த்து போராடி தன் ஓட்டை பார்வதி என்ற பெண் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நடிகரும்,மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்,இன்னும் கள்ள ஓட்டுக் கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது. உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்து போராடி, தன் ஓட்டை பார்வதி பதிவு செய்துள்ளார். அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களை போன்றவர்களால் தான், ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டுக் கலாச்சாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம். என்று அவர் கூறியுள்ளார்.

latest tamil news

இதையடுத்து கமலின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் பதிவாகி வருகிறது, அதில் நெட்டிசன் ஒருவர், ‘உங்க படத்துக்கு பிளாக் டிக்கெட் வித்தப்போ..இந்த அறசீற்றம் எங்க போச்சு ஆண்டவரே. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version