Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!

#image_title

வாணியம்பாடி அருகே 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக அமைத்த கழிவு நீர் கால்வாய் சிமெண்ட்,ஜல்லி தனித்தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு. 5 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றியும் பயனில்லை என்று பொதுமக்கள் வேதனை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாமல் கழிவு நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நின்றது.அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தொடந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஆதிதிராவிடர் குக்கிராமங்களுக்கு அடிப்படை வசதி மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் கடந்த 2022 ஆண்டு அப்பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க ரூ.7.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அப்பணிகளை நிறைவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும்போது தரம் அற்ற பொருட்களில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணிகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடமும் ஒப்பந்ததார்களிடமும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை செவியில் வாங்காமல் தெருக்களில் நடுவில் கழிவு நீர் கால்வாய் அமைத்து அதன் மீது சிமெண்ட் கான்கிரீட் போட்டு அந்த பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிறைவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே அந்த கழிவு நீர் கால்வாய் மீது உள்ள கான்கிரீட் துளைகள் ஏற்பட்டு தெரு நெடுகிலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து சிமெண்ட் மற்றும் ஜல்லி கற்களை தனி தனியாக கை விரல்களில் பெயர்த்து எடுக்கும் அளவிற்கு வலுவிழந்து உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தெருக்குளுக்கு நடுவே கழிவு நீர் கால்வாய் மீது கான்கிரீட் பொடபட்டுள்ளதால் அதன் மீது நடந்து செல்வோர் .

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும்,மேலும் அந்த தெருவின் நடுவில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்வதாகவும்,25 ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றியும் பயனில்லாமல் கழிவு நீர் கால்வாயில் செல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடப்பதாகவும்,இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்
பொது மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

Exit mobile version