TVK:ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சம் கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தவெக கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவித்தார்.
மேலும், திமுகவை அரசியல் எதிரியாக வெளிப்படையாக அறிவித்தார். தவெக உடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இவரது கொள்ளை அனைவரும் கவனிக்கும் வகையில் இருந்தது. அதன் பிறகு இவரது அரசியல் நகர்வுகள் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்விகள் எழுந்து உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏ வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 6 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் தவெக விஜய் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா எனக் கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஆதாவது, இது வரை அதிமுகவை பற்றி எவ்வித விமர்சனங்களையும் விஜய் அவர்கள் முன் வைக்க வில்லை. மேலும், அதிமுகவில் தற்போதைய இரட்டை இல்லை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் இக்கட்டான சூழல் உள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுகவுக்கு தவெக ஆதரவு கொடுக்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.