Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இது கட்டாயம்! இவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் எழுத சிறுபான்மை இன மாணவர்களுக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக அனைத்து பள்ளிகளிலும் முதல் பாடமாக தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, உட்பட பிற மொழி பள்ளி மாணவர்களும் பொதுத்தேர்வில்  தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டியுள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக விலக்கு கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மொழி வாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் கூறப்பட்டதாவது,

தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் இரு மொழிக் கொள்கை முறை உள்ளது. இதனால் மொழிவாரி சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். என வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் 2022- 23 ஆம் கல்வியாண்டில் மனுதாரர் பிரதிநிதித்துவம் படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த சுப்ரீம் கோர்ட் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டு விலக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version