Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

 

நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதற்கான

வயதுத் தகுதி 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் படித்து வேலைவாய்ப்பு இல்லாத அல்லது சுயவேலை செய்கின்ற இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு அதற்கான முன்னுரிமை அளிக்கப்படும்.

மற்ற காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்வோர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறாதவர்கள் என்பார்கள்.அதன்படி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் முதன்மை தபால் அலுவலகம்,அண்ணா சாலை, சென்னை.இந்நிலையில் நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 28.07.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெறும்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வுக்கு வருவோர் தங்களின் ரேசிவ் கட்டாயமாக எடுத்துக் கொண்டு வர வேண்டும்.மேலும்இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் வயதுச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதல் ஆகியவற்றுடன் கலந்துக்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ 5000 ரொக்க பாதுகாப்பாக செலுத்த வேண்டும்.எனவே ல் டு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version