குடித்து கெட்டுப் போன லிவரை மீண்டும் புதுப்பிக்க 10 ரூபாய் செலவு செய்தால் போதும்!!
உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கக் கூடிய பீர்க்கங்காயை எவ்வாறு சாப்பிடுவது எப்படி செய்து சாப்பிடுவது இதனால் என்ன நன்மைகள் என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த பீர்க்கங்காயை வாரத்திற்கு ஒரு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் இந்த பீர்க்கங்காயில் உள்ளது.
* உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல நல்ல சத்துகள் இந்த பீர்க்கங்காயில் இருக்கின்றது. இந்த பீர்க்கங்காயில் விட்டமின் சி, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் ஆகியச் சத்துக்கள் உள்ளது.
* நம் கல்லீரலை குணப்படுத்த இந்த பீர்க்கங்காய் உதவுகின்றது. சிலபேருக்கு குடித்து குடித்து கல்லீரல் கெட்டு போயிருக்கும். அவர்கள் அனைவரும் இந்த பீர்க்கங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய கல்லீரல் பழைய நிலைக்கு படிப்படியாக திரும்ப ஆரம்பிக்கும்.
* நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த பீர்க்கங்காய் மலச்சிக்கலுக்கும் மூலநோய்க்கும் சிறப்பான மாமருந்து.
* இந்த பீர்க்கங்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.
* பீர்க்கங்காயில் உள்ள பீட்டா கரோட்டின் சத்துக்கள் பார்வைக் கோளாரை சரி செய்யும். பார்வை திறனை மேம்படுத்த உதவி செய்கின்றது.
* இந்த பீர்க்கங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் முகத்தில் பருக்கள் இருக்காது. மருக்கள் இருக்காது. முகம் தெளிவாக இருக்கும். இது ரத்தத்தை சுத்தப்படுத்தி சரும நோயை கட்டுப்படுத்துகின்றது.
* இந்த பீர்க்கங்காய் நமக்கு ஏற்படும் தோல் நோய்களை குணப்படுத்த உதவுகின்றது. இந்த பீர்க்கங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சொறி, புண், அறிப்பு போன்ற தோல் நோய்கள் ஏற்படாது.
* நோய் எதிர்ப்புச் சக்தியை இந்த பீர்க்கங்காய் அதிகரிக்க உதவுகின்றது.
* சிலருக்கு வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகி வயிற்றில் புண் இருந்துகொண்டே இருக்கும். அப்படி உள்ளவர்கள் இந்த பீர்க்கங்காயை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* உடல் முழுவதையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பீர்க்கங்காய் உதவும். சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் எரிச்சலை தடுக்க இந்த பீர்க்கங்காய் உதவுகின்றது.
* பீர்க்கங்காயில் எல்லா வகையான விட்டமின்களும் தாது உப்புக்களும் உள்ளது. இதனால் நமது உடலை நோய்க்கிருமிகள் அண்டாமல் பாதுகாக்கின்றது.
* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது பசி உணர்வை கட்டுப்படுத்தவும் செய்கின்றது.
* அஜீரணக் கோளாறு, வயிறு உப்புசம் போன்ற வயிறு சம்பந்தமான நோய்களுக்கும் பீர்க்கங்காய் சரியான நிவாரணியாகும்.
பீர்க்கங்காயை சமைத்து சாப்பிடுவது எவ்வாறு:
அடுப்பில் அகண்ட சட்டியை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் மூன்று காய்ந்த மிளகாயை போட்டு அதில் இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் இரண்டு ஸ்பூன் வெள்ளை உளுந்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பீர்க்கங்காயை தோல் நீக்கி நறுக்கி அதை இந்த சட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுவைக்காக புளி சிறிதளவு சேர்த்து மேலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு வதக்கிவிட வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். ஆறிய பிறகு இதை மிக்சி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பையும், சிறிதளவு பெருங்காயத் தூளையும் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை அப்படியே அரைக்க வேண்டும்.
இவ்வாறு அரைத்தால் நமக்கு பீர்க்கங்காய் துவையல் கிடைக்கும். இந்த துவையலை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.