Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னுக்கு வீங்கி குணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!!

It is enough to take these foods to heal the swelling of the baby!!

It is enough to take these foods to heal the swelling of the baby!!

பொன்னுக்கு வீங்கி பாராமிக்ஸோவைரஸால் ஏற்படும் பாதிப்பாகும். இது நம் உமிழ்நீர் சுரப்பிகளை கடுமையாக பாதிக்கிறது. பொன்னுக்கு வீங்கி வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது தாடைக்கு அருகில் வீக்கம் ஏற்படும். சில சந்தர்ப்பங்களில் மூளைக்காய்ச்சல், காது கேளாமை போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.எனவே கிழேகுறிப்பிட்ட உணவு முறையை பின்பற்றவும்.

உணவு முறைகள் :-

  1. பொன்னுக்கு வீங்கி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவை மெல்வது கடினமாக இருக்கும்.
  2. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பெரும்பாலும் எளிதில் மெல்லக்கூடிய உணவுகளைக் சாப்பிடுங்கள்.
  3. ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.
  4. உணவில் மிளகு, இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை அதிகம் சேர்க்கவும்.
  5. ஓட்ஸ், மசித்த உருளைக்கிழங்கு மற்றும் அரிசி கஞ்சி போன்ற மென்மையான உணவுகளை சாப்பிடலாம்.
  6. சர்க்கரை சேர்க்காத காய்கறி ஜூஸ்களை குடிக்கலாம்.
  7. கோழி சூப், காய்கறி சூப், பாகற்காய், கீரை வகைகள் ஆகியவற்றை சாப்பிடுவது நோய் பாதிப்பில் இருந்து விரைவாக குணமடைய உதவும்.
  8. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி அதிக அமிலத்தன்மை கொண்டவை மற்றும் உமிழ்நீரின் வெளியீட்டை துரிதப்படுத்தும். இது பொன்னுக்கு வீங்கியால் ஏற்படும் வலியை அதிகரிக்கிறது. எனவே அமிலத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  9. அதே போல இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்க்கவும்.
  10. நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவாக இல்லாத போது பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
Exit mobile version