சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு!

0
144
It is forbidden to go anywhere in Chennai! CM announces new!

சென்னையில் இங்கெல்லாம் செல்ல தடை! முதல்வர் புதிய அறிவிப்பு!

கொரோனாவின் தாக்கத்திலிருந்து தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு வருகிறோம். கடந்த மாதத்தில் இருந்து தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு மூன்று நாட்களாக கொரோனாவின் தாக்கம் சிறிது உயர்ந்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

பெரு நகரமான சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் போன்ற பகுதிகளில் தொற்று பாதிப்பு வழிமுறைகளை பின்பற்றுவது பற்றிய வணிக நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் சென்னை மாநகராட்சியில், ரிப்பன் பில்டிங் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்டறியப்பட்டு சில பகுதிகளில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை, நாளை முதல் ஆகஸ்ட்  9ம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொத்தவால்சாவடி மார்க்கெட் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து 9ஆம் தேதி வரை செயல்பட அனுமதி இல்லை என்றும் வணிகர் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வணிகர்கள் மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப தங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.