இனி ரேஷன் கடைகளில் இது கட்டாயம்! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் படும் அவநிலையை அறிந்து தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதிவிகளை செய்து வந்தார்.இந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் என்பது போல தான் இருந்தது.இரு மாத காலங்களுக்கு பீரீ ரேஷன் பொருட்கள்,முதல் மாதம் ஊரடங்கின் போது ரூ.2000 அதனையடுத்து 12 இலவச மள்ளிகை பொருட்கள் என மாநில அரசு பல உதவிகளை இந்த கொரோனா ஊரடங்கின் போது செய்து வந்தது.
வரும் மாதம் 30 தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன்கார்டு என்ற திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஓர் பக்கம் ஆணை பிறபித்துள்ளது.அதுமட்டுமின்றி நம் தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளுக்கு அதிகப்படியாக விண்ணப்பங்கள் வந்த போதிலும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தனர்.ஏனென்றால் அதற்கு நலத்திட்ட உதவிகளை தருவதற்கு போதுமான அளவு நிதி இல்லாததால் அதனை ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தனர்.தற்போது அதிகப்படியான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால் இந்நிலையில் ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பெண்கள் குடும்ப தலைவிகளாக உள்ள ரேஷன் அட்டைகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.தற்போது அந்த திட்டமானது இம்-மாதத்திலிருந்து செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.இப்பொழுது நியாய விலைக்கடைகளில் அதிகளவு ஊழல் நடக்க ஆரம்பித்து விட்டது.நடக்கும் ஊழலை இணையத்தில் குறிப்பிடலாம் என தமிழக அரசு கூறியது.அந்த இணையத்தள வளையை பயன்படுத்தி சிலரால் குறிப்பிட முடியாமல் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
அதனால் இனி குறைககளை கூறும் வகையில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் புதியதாக பதிவேடு ஒன்று அமைக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு புதிதாக ஆணை பிறப்பித்துள்ளது.இந்த பதிவேட்டின் மூலம் அனைத்து குறைகளையும் தெரிவிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.இந்த பதிவேடு செயல்முறைக்கு வந்ததால் இணையத்தின் மூலம் கூறும் முறை ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.இணையத்தின் மூலமும் நடக்கும் ஊழலை தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.