Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி வீடு கட்ட அனுமதி பெறுவது சுலபம்.. வந்தது புதிய நடைமுறை!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!! 

It is now easy to get permission to build a house.. a new procedure has arrived!! Chief Minister Stalin's announcement!!

It is now easy to get permission to build a house.. a new procedure has arrived!! Chief Minister Stalin's announcement!!

மக்கள் இனி வீடு கட்ட அனுமதி பெற தாமதமோ, லஞ்சமோ, இடைத்தரகரோ தேவையில்லை. “குடியிருப்புக்கான கட்டிட அனுமதி பெற “ஒற்றை சாளர முறை”யை பயன்படுத்துங்கள். இப்போது, 2,500 சதுர அடியிலிருந்து 3,500 சதுர அடி வரை வீடு கட்ட விரும்பும் நபர்கள், தங்களின் அடிப்படை ஆவணங்களை சுய சான்றிதழுடன் சமர்ப்பித்து அனுமதி பெறலாம்.

அதிகாரிகளை அணுகாமல் கட்டிட அனுமதி பெறுவது பலருக்கும் சிக்கலாக இருந்தது. வார்டு கவுன்சிலர்கள் முதல் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு, லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை தொடர்ந்தது. இதனால் அனுமதி பெறுவதில் சிக்கல் மற்றும் தாமதமும் ஏற்பட்டது, இதை முற்றிலும் தடுக்க, “முதல்வர் மு.க. ஸ்டாலின்” அவர்கள், கட்டிட அனுமதி வழங்கும் பணியை முழுமையாக “ஒற்றைச் சாளர” முறைக்கு மாற்றினார். இதன் மூலம், சிறிய அளவிலான வீடு கட்ட விரும்புவோருக்கு விரைவாக அனுமதி கிடைக்க புதிய நடைமுறை பலனளிப்பதாக உள்ளது. வீடு கட்ட விரும்புபவர்கள், உங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்களில், கட்டிட அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.

அதற்கான ஆவணங்கள்:

1. பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநர் கையெழுத்துடன் கூடிய திட்ட வரைபடம்.
2. சொத்து ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள விற்பனைப் பத்திரம் மற்றும் பட்டா.
3. தள புகைப்படம்: கட்டிடத்திற்கான நிலப்பரப்பின் புகைப்படம்.
4. அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவின் ஆவணங்கள்.

வலைத்தளத்தில் நீங்கள் விண்ணப்பத்தை, விண்ணப்பம் செய்த உடனே கட்டண விவரங்களை வலைதளத்தில் அறிந்துகொள்ளலாம். கட்டணத்தை வலைதளத்தில் செலுத்திய, சில மணி நேரங்களிலேயே “அனுமதி ஒப்புகை சான்றிதழ்” விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க படுகிறது.

திட்டத்தின் பயன்கள்:

இம்முறையில் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விண்ணப்பிக்க முடிகிறது. மக்கள் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த உதவுகிறது. மக்களின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் இந்த திட்டம் அமைத்துள்ளது. இதுவரை இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடு கட்ட அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version