இனி திருப்பதிக்கு செல்ல இது கட்டாயம்! தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றின் பாதிப்பானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் மற்றும் இரண்டாம் அலையை கடந்து வந்துள்ளனர்.இந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.மேலும் இந்த இரண்டாம் கட்ட அலையின் போது அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.அதன் பாதிப்பால் அனைத்து புனித தலங்கள் மூடப்பட்டது.அத்தோடு மக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களும் தற்காலிகமாக மூடினர்.மேற்கொண்டு அரசாங்கம் மக்களை தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.உயிர் இழப்புக்கள் அதிகளவு நடந்ததால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மேலும் அரசாங்கம் கூறிய விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் ஆரம்பித்தனர்.அதனால் தொற்றின் பாத்திப்பு சற்று குறைய ஆரம்பித்தது.அதனையடுத்து அனைத்து துறைகளும் செயல்பட அனுமதி அளித்தனர்.அதேபோல புனித தலங்களை திறக்கவும் அனுமதி கொடுத்தனர்.பல சிறப்பு மிக்க கோவில்களில் கோலாகல பண்டிகைகள் நடப்பதற்கு தடை விதித்தனர்.அந்தவகையில் வேளாங்கண்ணியில் ஆண்டு தோறும் நடக்கும் தேர் திருவிழாவில் பல ஆயிரம் கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.இம்முறை பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என ஆலைய நிர்வாகமே கூறியுள்ளது.
மக்கள் அதிகம் கூட்டம் கூடுவதினால் அதிகளவு தொற்று பரவ வாய்ப்புகள் உள்ளது.அதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என கூறினர்.அதனைப்போல திருப்பதியிலும் அங்குள்ள உள்ளூர் பக்தர்களை தவிர இதர மாநிலம் சேர்ந்த மக்கள் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்திருந்தது.அதனையடுத்து தொற்று பாதிப்பு சற்று குறைந்ததால் கடந்த 20 ம் தேதி அனைத்து மாநில மக்களும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.அதுமட்டுமின்றி இலவச தரிசனத்தில் மக்கள் இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி அளித்தனர்.
மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் பதிவு செய்யும் மக்களுக்கு புதிய விதிமுறைகளை தற்போது அமல்படுத்தியுள்ளனர்.அந்தவகையில் திருப்பது கோவிலுக்கு செல்ல ஆன்லைனில் டிக்கெட்டை புக் செய்யும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திருப்பதற்கான சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அது இல்லையென்றால் 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இம்மாதம் 25 ம் தேதி முதல் பக்தர்கள் ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.மேலும் 24ம் தேதி காலை 9 மணிக்கு மேல் ரூ.300 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டுக்களை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளனர்.