Dindigul: திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்.
திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலை நேருஜி நகரில் அமைந்துள்ளது சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை. மேலும், இது எலும்பு முறிவு சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனை ஆகும். தரை தளம் முதல் 4 மாடிகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மருத்துவமனை வரவேற்பு அறையில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு தரைத் தளம் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கி இருக்கிறது. இதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் லிஃப்ட்டில் கீழே இறங்க முயன்ற மணி முருகன் அவருக்கு உதவியாக வந்த அவரது தாயார் மற்றும் மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழந்த இருக்கிறார்கள்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் லிஃப்ட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே இந்த விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்தார்.