ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..

0
152
It is reported that Ukraine and Russia are going to sign the grain export in the presence of the UN Secretary General!!..

ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் உக்ரைன், ரஷ்யா தானிய ஏற்றுமதிக்கு கையெழுத்திட உள்ளதாக தகவல்!!..

உக்ரைன்-ரஷ்யா இருநாடுகளுக்கிடையேயான போர் மாதக்கணக்கில் நீடித்து வருகிறது. இதனால் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்து வருகிறது. இதனை புதுப்பிக்கும் நோக்கில் தானே ஏற்றுமதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்கிரனும் கையெழுத்திட உள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

ரஷ்யா உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை,சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற  தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில் பல மாதங்களாக தானே ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும் தேவையை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் துறைமுகத்தில் 25 மில்லியன் டன் கோதுமை மற்றும் பிற தானிய வகைகள் தேங்கி கிடப்பதால் தானியங்கள் அனைத்தும் நீர் கோர்த்து அழுகிய நிலையில் வீணாகின்றது. மேலும் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட உக்ரைன் கடுங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதி தடுக்கப்பட்டதால் உலகளவில் உணவு பொருட்களின்  நெருக்கடி ஏற்பட்டது.

இதை சீர் செய்ய இரு நாடுகளும் போருக்கு மத்தியில் ஒரு சமரச தீர்வுக்கு வந்துள்ளது. இந்நாட்டு போர்க்கு மத்தியில் தடை செய்யப்பட்ட கருங்கடல் பகுதியில் தானிய ஏற்றுமதியை உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன. இந்த நெருக்கடியில் இருந்து விடுபட இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டது.

போரிடும் இரு தரப்புகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த முதல் பெரிய ஒப்பந்தம் இதுவே ஆகும். இந்தப் போரினால் உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது இதனால் பல ஏழை மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.மேலும் சிலர் பட்டினியால் உயிரிழந்தனர்.

துருக்கி செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவிக்கையில் உலக உணவு பாதுகாப்பிற்கு முக்கியமாக ஏற்றுமதி ஒப்பந்தம் இஸ்தான்புல்லில் அதிபர் எர்த்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் குட்டெரெஸ் ஆகியோரின் முன்னிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுடன் இணைந்து கையெழுத்திடப்படும் என்றார்.

இதன்படி உக்ரையினில் உள்ள ஒடேசா, பிவ்டென்னி மற்றும் சோர்னோமோர்ஸ்க் ஆகிய மூன்று துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி நடைபெறும். மேலும் எதிர்காலத்தில் அவற்றைப் பல துறைமுகங்களுக்கு விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறோம்.

எனினும் ரஷ்யாவில் அச்சுறுத்தல் தொடரும் என்று சந்தேகப்படுவதால் இந்த ஏற்றுமதிகளின் பாதுகாப்பு ஐ.நா கண்காணிப்பு குழுவால் கண்காணிக்கப்படும் என்று உக்ரைன் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதனால் உணவு பஞ்சம் பெரிதாக குறைக்கப்படும் என தெரிகிறது.