ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

0
172

ஊரடங்கு விதிப்பது தொடர்பாக மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்! மத்திய அரசு அனுமதி!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று படிப்படியாக பல நாடுகளுக்கும் சென்று தற்போது இந்தியாவிலும் நுழைந்து நாட்டில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஏற்கனவே சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதர மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.

இந்த நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் அந்தந்த மாநிலங்களே ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகளே முடிவு செய்யாவும், தேவைபட்டால் உள்ளாட்சி அல்லது மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கடாயமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்புவதை தடை செய்யவும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகளை கைவிட்டுவிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.