Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்பருத்திப் பூ, சங்குப் பூ செடிகளை இந்த திசையில் வைத்தால் மிகவும் அதிர்ஷ்டம்..!!

அனைத்து வீடுகளிலும் பூச்செடிகள், மரங்கள் இது போன்றவைகளை வளர்ப்பது என்பது பொதுவான ஒன்றுதான். இவ்வாறு வீட்டில் வைத்து தாவரங்களை வளர்த்து, அவற்றை தினமும் பார்த்து வருவதன் மூலம் மன நிம்மதி என்பது கிடைக்கும். அந்த வகையில் வாஸ்து செடிகளையும், மருத்துவ குணங்களைக் கொண்ட செடிகளையும் நமது வீட்டில் வைத்து வளர்ப்போம்.

நாம் வளர்க்கக்கூடிய செடிகளுள் சங்குப்பூ மற்றும் செம்பருத்தி செடிகளை நமது வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்து வந்தால், பல மடங்கு அதிர்ஷ்டங்கள் நமக்கு கிடைக்கும் என்பது குறித்து தற்போது காண்போம்.

சங்குப்பூ-இது மகாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய ஒரு செடி. இந்தப் பூவின் நிறம் கருநீலம் என்பதால் சனீஸ்வரர் பகவானின் ஆசியும் பெற்றது. சனி தோஷம் இருப்பவர்கள் இந்த சங்குப் பூவினை, சனிபகவானுக்கு வைத்து வழிபடும் பொழுது அதன் பாதிப்புகள் சற்று குறையும். வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் என்றால் இந்த பூவினை விஷ்ணுவிற்கும், மகாலட்சுமிக்கும் வைத்து வழிபட வேண்டும்.

வீட்டின் வடக்கு திசையில் இந்த சங்குப்பூ செடியை வைத்து வளர்த்து வந்தோம் என்றால், மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை நமக்கு கொடுக்கும். வடக்கு திசையில் வைத்து வளர்க்க இயலாதவர்கள் மற்ற திசைகளிலும் வைத்துக் கொள்ளலாம். மேலும் நமது வீட்டிற்கு வரும் தீய சக்திகளையும், கண் திருஷ்டிகளையும் நீக்கும். இந்த பூக்களை நமது கையில் வைத்து பார்க்கும் பொழுது மன அழுத்தம் குறையும்.

செம்பருத்தி செடி என்பது பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்றால் சிவப்பு நிற செம்பருத்தி செடிதான். நமது வீட்டிற்கு வருகின்ற கண் திருஷ்டி, பொறாமை ஆகிய அனைத்தையும் தடுத்து தன்னிடம் ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது.

செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு முக்கிய பிரச்சனை என்றால் திருமணம் தாமதமாக ஆவதுதான். எனவே செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் இந்த சிவப்பு நிற செம்பருத்தி செடியினை வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம், செவ்வாய் தோஷத்தின் பாதிப்புகளில் இருந்து சற்று தப்பிக்கலாம்.

இந்த செம்பருத்தி பூவானது விநாயகர் மற்றும் துர்க்கை அம்மனுக்கு மிகவும் பிடித்தமான மலர். எனவே இந்த இரண்டு தெய்வங்களுக்கும் இந்த பூவினை வைத்து வழிபடும் பொழுது நமது வேண்டுதல்கள் அனைத்தும் விரைவாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

செம்பருத்தி செடியிடம் நமது வேண்டுதல்களை கூறும் பொழுது நமது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. செம்பருத்தி செடியை நமது வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் உள்ள உறவுகளிடம் எந்தவித கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

இந்தச் செடியை வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வளர்த்தால் மிகுந்த அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்று கூறப்படுகிறது.

Exit mobile version