Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!

பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்ஸி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே உண்டான மாதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், அவர் 6 மாத காலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் ஆர்எஸ்எஸ் ராஜா சித்தாந்தம் அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கடுமையான குற்றங்களை செய்த குற்றவாளிகளை வெட்கமே இல்லாமல் ஆதரிப்பது, பாதுகாப்பது பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் பாதுகாத்ததாக வரலாறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

பாஜகவை சார்ந்த ராகவன் தன் கட்சி சார்ந்த பெண்ணிடம் பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்டதை விசாரிக்க பாஜக ஒரு கமிட்டியை அமைத்தது. அது என்ன ஆனது? அந்த அருவருக்கத்தக்க செயலை வெளிக்கொண்டு வந்தவர்கள் தான் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்களே தவிர ராகவன் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் பாஜகவை சார்ந்த சகோதரி பாஜகவின் மீது விமர்சனங்களை வைத்திருக்கிறார். காசு கொடுத்து சமூக ஊடகங்களில் விருப்பங்களை வாங்குவதை அம்பலப்படுத்தி உள்ளார்.

ஆகவே அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பாஜக முற்றிலும் பெண்களுக்கு எதிரான காட்சி என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஜோதிமணி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

Exit mobile version