Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை! தமிழக அரசின் அடுத்த அதிரடி!

Good news released by the Government of Tamil Nadu! This is the only right for them anymore!

நாளை மறுநாள் மீண்டும் இது தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையில் மற்ற நாடுகளுக்கு கொரோனா தொற்றின் பாதிப்புக்கள் அதிகளவு இருந்தாலும் இந்தியா குறைந்த அளவு பாதிப்பினையே சந்தித்தது.ஆனால் இந்தியா இரண்டாம் அலையில் எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி இருந்ததால் அதிகளவு பாதிப்புகளை சந்தித்தது.குறிப்பாக அதிக உயிர் சேதங்களை இழக்க நேரிட்டது.அதிலிருந்து மீண்டு தற்போது மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ முன்னேறியுள்ளனர்.

இருப்பினும் தற்போது கொரோனா தொற்றானது மூன்றாவது அலையை நோக்கி செல்கிறது.மூன்றாவது அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளனர்.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வராவிட்டாலும் தற்போது 50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கடந்த 12 ம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் என்ற அடிப்படையில் 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்டதில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என திட்டமிட்டனர்.ஆனால் மொத்தம் 28 லட்சம் பேர் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அந்த முகாம் வெற்றிகரமாக அமைந்ததால் மீண்டும் 19 ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.இது சம்மதமாக தலைமை செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியருடனும் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் இன்றும் தடுப்பூசி செலுத்திகொள்ளாத மக்களை கண்டு தடுப்பூசி செலுத்துவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதும் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்ற முகாமை போலவே இந்த வாரமும் சிறப்பாக நடைபெற மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என கூறினார்.அதுமட்டுமின்றி அந்த காணொளி காட்சியில் இன்னும் எவ்வளவு தடுப்பூசி தேவைப்பட உள்ளது என்பதை பற்றி கேட்க உள்ளார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கலந்துகொள்ள உள்ளனர்.

Exit mobile version