மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று முதல் இது தொடக்கம்!
சட்டமன்ற தேர்தலானது கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்தது.இம்முறை தேர்தலானது விறுவிறுப்பாக நடைபெற்றது.கட்சியின் இரு மூத்த தலைவர்கள் இன்றி நடைபெறும் முதல் தேர்தல் இதுவே ஆகும்.கொரோனா காலக்கட்டத்திலும் இம்முறை பிரச்சாரத் திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெற்றது.அதனையடுத்து கமல்ஹாசனும் மற்ற கட்சிகளுக்கு இணையாக போட்டி போட்டு வாக்குகளை சேகரித்தார்.
இவருக்கு எதிராக பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார்.இருவருக்கிடையே சரியான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் கமல்ஹாசன் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்ததும் கட்சியிலிருந்து ஒவ்வொருவராக விலகினர்.முதலாவதாக மக்கள் நீதி மய்யத்தில் துணை தலைவர் மஹேந்திரன் கட்சியிலிருந்து விலகினார்.அவரிடம் பத்திரிக்கையாளர்கள் ஏன் கட்சியை விட்டு விலகுகிறீர்கள் என பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு மஹேந்திரன் கூறியதாவது,கட்சியில் ஜனநாயகம் இல்லை.கமல் கூறுவது தான் அனைவரும் கேட்க வேண்டும் என்ற ஆதிக்கம் அதிகாமாக உள்ளது.அதனால் கட்சியை விட்டு விலகுவாதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இவர் விலகியதும் கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த முருகானந்தம்,பத்ம பிரியா,மவுரிய,பொன்ராஜ் போன்றவர்களும் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர்.
இதில் மகேந்திரன் மற்றும் பத்மபிரிய ஆகியோர் திமுக-வில் இணைந்தனர்.இவர்கள் கமலுக்கு அடிமையாக இருக்க விரும்பவில்லை எனக் கூறி தற்போது திமுகவில் இணைந்துள்ளனர்.மேலும்,இதுபற்றி இரு கட்சி இடையே பெருமளவு பரபரப்பை ஏற்படுத்தியது.அதனையடுத்து தற்போது மக்கள் நீதி மய்யத்தில் கம்ஹாசன் நம்வர் தொழிற்சங்க பேரவை இன்று துவங்கியுள்ளார்.மேலும் இதனை கர்ம வீரர் காமராசர் பிறந்த நாளில் தொடங்குவதற்காக இத்தனை நாட்கள் காத்திருந்துள்ளர்.
மேலும் அவர் காமரசார் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனையடுத்து தொழிற்சங்க கொடியை ஏற்றிநார்.அதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம்தலைமை செயலகத்தில் நலிவடைந்த 119 குடும்பங்களுக்கு நல உதவிகளை செய்வதாகவும் கூறினார் எனபது குறிப்பிடத்தக்கது.