எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!

0
93
vaalli-mgr-news4 tamil

எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!

கவிஞர் வாலி – Vaali

தமிழ் சினிமாவில் தனிக்கென்று இடம் பிடித்து மக்கள் மத்தியில் நட்சத்திரமாய் வலம் வந்தவர் கவிஞர் வாலி. இவர் காவியக்கவிஞரென்று ரசிகர்களால் போற்றப்படுகறிது. தமிழ் சினிமாவில் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். காலத்திற்கு தகுந்தாற்போல் டிரெண்டில் என்ன இருந்தது என்பதை கவிதையாய் பாடல்களில் புகுத்திய புதுமைப்பித்தன் அவர்.

இவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் ரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கும். கவிஞர் வாலி, பாடல் வரிகளில் தனக்கென்று அடையாளத்தை புகுத்தியவர். அதே சமயம் அனைத்து மக்களும் பாடல்களை புரிந்து கொள்ளும் வகையில் மொழியை பயன்படுத்தியிருந்தார் கவிஞர் வாலி.

ஒரு சேனலுக்கு கவிஞரும், பாடலாசிரியருமான வாலி மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

எம்.ஜி.ஆர் -M.G.R

எவ்வளவு வளர்ந்தாலும் பண்புகள் ஒரே மாதிரி இருக்க வேண்டும். நான் முதன் முதலில் பாட்டு எழுதின படம் அழகர் மலைக்கெல்லாம். அந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் நம்ம புரட்சிதான் எழுதினாரு. எனக்கு அந்தப் படத்தில் ஒரு பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது.

பாடகி சுசீலா பாடின முதல் பாட்டே அதுதான். ஆனால், ரெக்கார்டில் என் பெயர் இருந்ததே தவிர, சினிமா தியேட்டரில் என் பெயர் வரவே இல்லை. அதற்கு பிறகு எம்.ஜி.ஆர் நடித்த நல்லவன் வாழ்வான் படத்தில்தான் என் பெயர் தியேட்டரின் ஸ்கிரீனில் வந்தது. ஸ்கிரீனில் மட்டும் பெயர் வந்தா போதாது. மக்கள் மத்தியிலும் பெயர் வரனும்.

ஒருமுறை தீபாவளிக்கு வெளியாக இருந்த  ‘கற்பகம்’ என்ற படத்தில் முதல்முறையான நான் எல்லா பாட்டையும் எழுதினேன். அந்த படத்திற்கு இசையமைத்தவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. அவரிடம் பாட்டு எழுதுவது நடக்கவே நடக்காத காரியம். கண்ணதாசன், பட்டுக்கோட்டை தவிர வேற யாரையும் அவர் கிட்டயே சேர்க்க மாட்டார். அப்படிப்பட்டவரிடம் நான் பாடல் எழுதிவிட்டேன்.

இந்த பக்கம் பார்த்தால் கண்ணதாசன் பாடல் எழுதிய படம், இந்த பக்கம் பார்த்தால் பட்டுக்கோட்டை பாடல் எழுதிய படம்… நான் நினைத்தேன். இப்படி ஜாம்பவான் இருக்கும்போது நம்ம பாட்டு ஹிட்டடிப்பது என்பது ஒரு சேலன்ஜ்தான் என்று நினைத்தேன். அந்தத் தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது என்று வாலி மனம் மறந்து பேசினார்.