Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீர்க்க முடியாத பல பிரச்சனைகளையும் தீர்த்துக் கொடுக்கும்..!! கடவுளை இப்படி வழிபடும் பொழுது..!!

பல கடவுள்களையும் தெய்வங்களையும் கொண்டுள்ள இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தெந்த கடவுள்களுக்கு எந்தெந்த முறையில் வழிபாடுகளை செய்ய வேண்டும், அவற்றுக்கான பலன்கள் என்ன? என்பதை முன்னோர்கள் வகுத்து அறிவுறுத்தி உள்ளனர். அவற்றை விரிவாக பார்க்கலாம்.

1.எலுமிச்சை, வெல்லம், அவல், மாதுளை, நெல், தேங்காய், பசும்பால் ஆகிய ஏழு வகை பொருட்களை, சிவாலயத்தில் தானம் அளிப்பதால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

2.கல்வி கலைகளில் சிறக்க, குழந்தைகள் நன்றாகப்படிக்க, பெருமாள் கோவில்களில் அஸ்த நட்சத்திரத்தன்று துளசி மாலை சாற்றி வழிபடவேண்டும். சரஸ்வதி தேவிக்கு புனர்பூச நட்சத்திர நாளில் அர்ச்சனை ஆராதனை செய்வதாலும், கல்வியில் சிறந்து விளங்கலாம்.

3. சிவன் கோவிலில் இருக்கும் வன்னி மரம் மற்றும் வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளை கூறினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஒரு ஐதீகம் உண்டு.

4. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போன்று இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாட்டி அபிஷேகம் செய்து, நெய் தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் அந்த தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

5. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

6. நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், கண் திருஷ்டி, திருமணத் தடை ஆகிய அனைத்தும் விலகி நன்மைகள் நடைபெறும்.

7. ஆலயங்களில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்குமம் வைத்து, எலுமிச்சம் பழம் குத்தி வழிபட்டால் திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

8.வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்ரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட, கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

9.பிரதோஷ காலத்தில், ரிஷபாரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீப ஆராதனையை பார்த்தால் எல்லா விதமான நோய்களும், வறுமையும் நீங்கும்.

10.மாதா மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிஷேகம் செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும்.

11.இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சினை தீரும்.

12.செவ்வாய்க்கு அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட மூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

13.விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

14.புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் காலபைர வருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

15.வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வர, விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

Exit mobile version