Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கலை முன்னிட்டு நாளை முதல் இது தொடக்கம்.. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

It will start from tomorrow on the occasion of Pongal.. Super announcement!!

It will start from tomorrow on the occasion of Pongal.. Super announcement!!

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 3-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்க தொடங்குகிறது. இந்த டோக்கன்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற தவறியவர்கள், ரேஷன் கடைகளில் சென்று அதை வாங்கி பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற முடியும்.

இதன்படி, 2.20 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் இது வழங்கப்படுகிறது.தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பு 2.20 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி சேலை வழங்கப்படும். 3-ம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும், மேலும் அது வீடு வீடாக செல்லும், வாங்க தவறியவர்கள் ரேஷன் கடைகளில் பெறலாம்.

ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும். இந்த தொகுப்பை 2 கோடி 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 குடும்பங்கள் பெறுவார்கள். ₹249.76 கோடி செலவில் இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.

Exit mobile version