TN Ration Shop: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு தற்காலிகமாக தேவையில்லை என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் நியாய விலை கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் திட்டத்தின் பயனை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் அரிசி பருப்பு சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தி இருந்தனர். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் ரேஷன் அட்டையை உபயோகிக்க முடியாது. ஆனால் பலரும் வேலைக்கு வெளியூரில் இருப்பதால் இதனை நேரில் வந்து சரிவர செய்ய முடியவில்லை.
மேற்கொண்டு இதன் அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் ரேஷன் ஊழியர்களே இனி வீடுகள் தோறும் சென்று கைரேகை பதிவு செய்து கொள்ளுமாறு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால் தற்பொழுது பெஞ்சால் புயல் காரணமாக பல்வேறு கடல்சார் மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இவர்கள் பொருட்கள் வாங்க நியாய விலைக் கடைக்கு சென்றால் மேற்கொண்டு கைரேகை பதிவு என தாமத படுத்துவதுடன் பொருட்கள் வழங்குவதுமில்லை என்ற புகார் வைத்துள்ளனர்.
இதனையடுத்து இனி ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்கும் நபர்களிடம் கைரேகை பதிவு செய்ய முடியவில்லை என்றாலும் கட்டாயம் பொருட்கள் கொடுக்க வேண்டும். அவர்களை வெறுமனே அனுப்பக்கூடாது என நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாக கூறியுள்ளனர். மேற்கொண்டு காலம் தாழ்த்தக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.