Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனி வாராவாரம் கொண்டாட்டம் தான்!! அஜித் ரசிகர்களே இது உங்களுக்கு தான்!!

It's a weekly celebration now !! This is for you Ajith fans !!

It's a weekly celebration now !! This is for you Ajith fans !!

இனி வாராவாரம் கொண்டாட்டம் தான்!! அஜித் ரசிகர்களே இது உங்களுக்கு தான்!!

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது  தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவான வலிமை படம். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார் மற்றும் போனிகபூர் தயாரிக்கின்றார் மேலும் இந்த படம் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ளது. இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகி பாபு அவர்கள் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்தப் பாடத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் நிராவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் தின் படப்பிடிப்பு துவங்கி 2 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாகவே இந்த படத்தை பற்றிய எந்த ஒரு தகவலையும் இந்த படக்குழு வெளியிடவில்லை. எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் அப்டேட் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அஜித் அவர்களின் பிறந்த நாளன்று வெளியிடுவதாக தகவல் வந்தது. ஆனால் அந்த சமயத்தில் தமிழகத்தில் குரானா தோற்று பரவல் மக்களிடையே அதிதீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அந்தப்படத்தின் அப்டேட் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த செய்தி ரசிகர்களை பெரிதும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. மேலும் சோகத்திலும் மற்றும் ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஜூலை 11ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த முறை படக்குழு கூறியபடியே ரசிகர்களை ஏமாற்றாமல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் இந்த பட போஸ்டரை எதிர்பார்த்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டர் மிகவும் பிரம்மாண்டமாகவும் ரசிகர்களை காக்க வைப்பதில் எவ்வித தவறும் இல்லை என்று கூறும் அளவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்தது. இந்நிலையில் முதல் பார்வை போஸ்டர் வெளியானதிலிருந்து அடுத்தடுத்து பல போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தது வலிமை படக்குழு. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் வலிமை அப்டேட்டை இனி வரும் வாரங்களில் அதிகம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வலிமை படத்தின் டீசர் வெளியிடுவதற்கு முன்பாக படத்திலிருந்து  2 சிங்கிள் பாடல்களை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. மேலும் படத்தில் வரும் காட்சிப்படி அஜித்குமார் மதுரையில் ஆடிப்பாடும் ஓபனிங் பாடலும், ஒரு குடும்ப சென்டிமென்ட் பாடலும் வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது. மேலும் அந்த பாடலுக்கான இறுதிகட்ட இசைக் கோர்ப்பு பணிகளில் யுவன் சங்கர் ராஜா இறங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆயுத பூஜை பண்டிகைக்கு வலிமை படம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை வருவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் வரும் வாரங்களில் வலிமை படத்தை பற்றிய நிறைய தகவல்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் முடிவில் படக்குழு  உள்ளது.

Exit mobile version