நம் பாரம்பரிய பழங்களில் வில்வம் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக திகழ்கிறது.வில்வ மரத்தின் பழம்,இலை,வேர் ஆகிய அனைத்தும் நோய் பாதிப்புகளை குணமாக்கும் மருந்தாக திகழ்கிறது.
வில்வம் பழ மருத்துவ பயன்கள்:
1)சளி தொந்தரவு இருப்பவர்கள் வில்வ பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் அவை சீக்கிரம் குணமாகும்.
2)வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக வில்வம் பழத்தை அரைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
3)வில்வம் பழத்தை ஜூஸாக அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் கண் பார்வை தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
4)வில்வம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிட்டு வந்தால் குடல் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
5)வயிறு கோளாறு பிரச்சனை ஏற்பட்டால் வில்வ பழத்தை அரைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
6)இதயம் தொடர்பான நோய் பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் தினம் ஒரு வில்வம் பழம் சாப்பிடலாம்.
7)சிறுநீரக கல்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் வில்வம் பழத்தை சாப்பிட்டால் உரிய பலன் கிடைக்கும்.
8)வில்வ பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
9)வில்வ காயை அரைத்து சோம்பு மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் மூல நோய் பாதிப்பு குணமாகும்.
வில்வ இலை மருத்துவ பயன்கள்:
1)வில்வ இலையை அரைத்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.பிறகு இதை காதுகளில் சில சொட்டு விட்டால் காது வலி முழுமையாக குணமாகும்.
2)வில்வ இலையை நன்கு காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு பாத்திரத்தில் பால் ஊற்றி சூடுபடுத்தி வில்வ பொடி 10 கிராம் அளவிற்கு கலந்து பருகி வந்தால் மது பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டுவிடலாம்.
3)வில்வ இலையை பொடித்து ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுவாசம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும்.
4) வில்வ இலையை நீர்விட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் மேக நோய் பாதிப்பு குணமாகும்.
5)வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து பசும் பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த சோகை பாதிப்பு குணமாகும்.