Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!!

It's hard to buy a car anymore !! See for yourself what the heck !!

It's hard to buy a car anymore !! See for yourself what the heck !!

இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!!

இந்தியாவிலேயே மிகவும் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி தனது நிறுவனத்தின்  பல்வேறு வகையான கார்களின் விலையை நடப்பு வருடத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இது, கார் வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் தனது  ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி ரக கார்களின் விலை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. கார்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு காரணம், கார்கள் உற்பத்திக்கு தேவையான உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது தான் என மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, கார்களின் எக்ஸ் ஷோரூமின் விலை 15,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற ஏப்ரல் மாதத்தில் செலெரியோ, ஸ்விஃப்ட் தவிர மாருதி சுசூகி நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் 22,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதும் உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு தான்  காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மாருதி சுசூகி தனது கார்களின் விலையை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் அனைவர்  மத்தியிலும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

Exit mobile version