இது ஆரம்பமே.. நீண்ட பயணம் இருக்கிறது! கமல்ஹாசன் பேச்சு!
நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசன் பேசிய போது, ” கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கெட்ட செய்தி தந்தியில் வரும், நல்ல செய்தி லெட்டரில் தான் வரும். முழு நேர அரசியல்வாதியாக ஏன் வரவில்லை என அனைவரும் கேட்கிறார்கள், இங்கு முழு நேர அரசியல்வாதி என்பது யார்? நீங்கள் முழு நேர குடிமகனாக கூட இருப்பதில்லை. விஜயின் முழு நேர அரசியல் என்பது அவருடைய பாணி, இது என்னுடைய பாணி. இந்த விழாவினுடைய அனைத்து செலவுகளும் என்னுடையது என்பதை திமிராகவே சொல்லுகிறேன். என் திமிரு என்பது எனக்கு பெரியாரிடம் இருந்து வந்தது.
கோவை தெற்கில் பலர் வாக்களிக்கவில்லை. இப்படி இருந்தால் 95 லட்சம் மட்டுமே செலவு செய்த ஒருவனால் ஜெயிக்கவே முடியாது.
அனைவரும் வெளியே வாருங்கள் வாக்களியுங்கள். நீங்கள் கொடுத்த கோடி தான் என்னிடம் உள்ளது ஆயிரம் கோடி வேண்டும் என்றால் உங்களிடமிருந்து திருடினால் தான் கிடைக்கும்.
என்னை அரசியலுக்கு வர வைப்பது மிக கடினம் என கூறினார்கள் போக வைப்பது அதைவிடக் கடினம்.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல சோகத்தில் வந்தவன்.
அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. அதில் தொடர்ந்து அழுத்தமாக நடை போட்டுக் கொண்டே இருப்பேன்.
முதலில் தேசம்.. பிறகு என் தமிழ்நாடு.. அதன் பிறகே மொழி!
இது ஆரம்பமே நீண்ட பயணம் இருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று வரவேற்பு கொடுத்த முதல் குரல் என் குரல் தான். அரசியல் குறித்து அவருடன் பேசி உள்ளேன்.” எனப் பேசினார்.