Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே போன் கால் தான் பாக்குறியா! உதயநிதி இங்க இருப்பார் போலீஸாரிடம் ரகளை செய்த தம்பதியினர் வீடியோ வைரல்!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

It's only a phone call, Pakuriya! Udayanidhi will be here, the video of the couple who complained to the police went viral!

சென்னை மெரினா கடற்கரை சாலையில்  இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.  அந்த வகையில் மயிலாப்பூர் போலீசார் நேற்று இரவு மெரினா கடற்கரை லூப் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சந்தேகத்திற்கு கூறியவர்களை போலீசார்  விசாரணை செய்தார்கள். இதனை  காவலர் சிலம்பரசன் உள்ளிட்ட காவலர்கள் செய்து வந்து உள்ளார்கள். அப்போது மெரினா லூப் சாலையில் காரை நிறுத்தி பேசி கொண்டிருந்தவர்களை, அங்கிருந்து கலைந்து செல்ல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஒரு  காரில் இருந்த தம்பதியினர் தகாத வார்த்தைகளால் போலீசாரை திட்டியுள்ளார்கள்.

https://x.com/shanmugamchin10/status/1848228959806476449

மேலும் காரை எடுத்து செல்லும் படி  காவலர் கூறியதற்கு காருக்குள் இருந்த தம்பதி அநாகரீகமாக போலீசாரிடம் நடந்து கொண்டார்கள், மேலும் போலீசாரை நீங்கள் யார் என்று கேட்டு இருக்கிறார்கள், போலீசார் எடுத்த புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்கள். மேலும் ஒரு போன் கால் செய்தல் துணை முதலமைச்சர் இங்கேயே வருவார் பார்க்கிறேயா? என போலீசாரை மிரட்டும் வகையில் பேசினார்கள். வையாபுரி முஞ்சு, பல்லி முஞ்சி என்று கிண்டல் கேலி செய்துள்ளார்கள்.

மேலும் அந்த நபர் நான் குடித்து உள்ளேன், உங்கள் முகவரி எல்லாம் எடுத்து நாளை காலை  உங்களை காலி செய்து விடுவேன் என மிரட்டி ரகளை செய்துள்ளார், இறுதியாக காரை வட்டமிட்டபடி எடுத்து சென்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி  வருகிறது. ரகளையில் ஈடுபட்ட தம்பதி குறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version