Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா!

Its pricing will have a huge impact globally! India mourns in famous country!

Its pricing will have a huge impact globally! India mourns in famous country!

இதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா!

தற்போது உலக அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை அதிகமாக பயன்படுத்தும் 3 வது மிகப் பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திலிருந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு மிகுந்த உச்சத்தைத் தொட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாக இருப்பதால் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இதுகுறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் கொரோனாவிற்கு பிறகு உலகம் காணும் புதிய பொருளாதார வீழ்ச்சியை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும் எனவும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. எனவே நியாயமான அளவில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் சவுதி அரேபியா மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் எண்ணெய் விலையானது உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் நலன்களுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும். ஆனால் தற்போது அவை மிக அதிகமாக உள்ளன. ஏனெனில் உற்பத்தியை விட தேவை அதிகமாக உள்ளதும் ஒரு காரணம். இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா மற்றும் ஓபிசிஇ யிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version