மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!

0
321
It's up to you people.. This bank will not function in the coming days!! Sudden ban by RBI!!

மக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசியில் உள்ள பனாரஸ் மெர்கன்டைல் ​​கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் பேங்க் ரத்து செய்துள்ளது.இதனால் வங்கி நிரந்தரமாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.வங்கியின் உரிமம் ரத்தாக காரணம் வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்து வருவது தான்.

ஒரு வங்கி விதிமுறைகளை புறக்கணித்து வந்தாலோ,அல்லது மோசமான நிதி நிலமையை சந்தித்து வந்தாலோ,நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தாலோ ரிசர்வ் வங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கம்.அந்தவகையில் பனாரஸ் மெர்கன்டைல் ​​கூட்டுறவு வங்கியின் மோசமான நிதி நிலைமை காரணமாக அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதனால் வாடிக்கையளர்கள் தாங்கள் முதலீடு செய்திருக்கும் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து விடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கிறது.ஆனால் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இதுபோன்ற வங்கிகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் உரிமம் ரத்து செய்யப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த தொகை என்னவாகும் என்பது குறித்து அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டால் முதலீடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,00,000 வரை மட்டுமே கிடைக்கும்.நீங்கள் ரூ.10,00,000 மேல் முதலீடு செய்திருந்தாலும் உங்கள் வங்கி மூடப்பட்டால் டெபாசிட் இன்சூரன்ஸ் காப்பீட்டின் கீழ் தங்களுக்கு ரூ.5,00,000 மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்நிலையில் 99.98% வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் DICGC முழு வைப்புத் தொகையை பெறுவதற்கு முழு உரிமை உள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.இதற்கு முன்னதாக 9 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்கள் பதிவுச் சான்றிதழை மத்திய வங்கிக்கு திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.