Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு! இன்று விசாரணை ஆணையத்தின் ஆஜராகும் அப்பல்லோ மருத்துவர்கள்!

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கு சற்றேறக்குறைய 5 ஆண்டுகளாக நீண்ட இழுபறியில் இருந்து வருகிறது.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் விசாரணைக்கு முதலில் நீதிமன்றம் தடைவிதித்தது. அதன் காரணமாக, விசாரணை சற்று காலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தங்கள் தரப்பு விளக்கங்களை வழங்குவதற்கு விசாரணை ஆணையத்தின் மருத்துவ நிபுணர்கள் இடம்பெற வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை வைத்ததை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த குழுவில் இடம் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணையை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் பன்னீர்செல்வம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள், பாதுகாவலர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் என்று 1,50க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலம் வழங்கினார்கள்.

இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய சூழ்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 11 பேரின் சாட்சியத்தை உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவினடிப்படையில் ஏற்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அறிந்துகொள்ளும் விதத்தில் மறுவிசாரணை செய்ய அப்பல்லோ தரப்பு தெரிவித்தது இதனை ஏற்றுக்கொண்ட விசாரணை ஆணையம் 11 மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது.

அதனடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தவபழனி, செந்தில்குமார், உள்ளிட்டோர் ஆஜரானார்கள் இவர்கள் ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சைகள் தொடர்பாக வாக்குமூலம் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் நரசிம்மன், பால் ரமேஷ், உள்ளிட்டோர் இன்று ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சைகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்கயிருக்கிறார்கள்

Exit mobile version