Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்! மகிழ்சியில் ரசிகர்கள்!

Jackpot for Cook with Clown Sivanki! Happy fans!

Jackpot for Cook with Clown Sivanki! Happy fans!

குக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்! மகிழ்சியில் ரசிகர்கள்!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அதிக அளவு ரியாலிட்டி ஷோக்கள் பிரபலமடைந்து வருகிறது அதில் பிக்பாஸ்,குக் வித் கோமாளி என பல நிகழ்சிகள் அடங்கும்.பிக்பாஸை விட அதிக அளவு ரசிகர்கள் கொண்ட ஷோ  தான் குக் வித் கோமாளி.இதில் வரும் கோமாளிகள் குக்குகளுடன் சேர்ந்து செய்யும் விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு காமெடியாக தெரிகிறது.

அதில் முக்கியமாக மணிமேகலை,புகழ்,சிவாங்கி,பாலா ஆகியோர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் குக்குகளுடன் சேர்ந்து நடத்தும் நகைச்சவை அனைத்தும் வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.இது முதல் சீசனிலேயே அதிக அளவிற்கு விஜய் டிவிக்கு டி.ஆர்.பி கொடுத்தது.அதில் சிறிதளவு மாற்றம் கூட இல்லாமல் இந்த சீசனும் டிஆர்பி ஏறியுள்ளது.

இதில் பல கோமாளிகளுக்கு படம் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் தான் உள்ளது.அதில் தற்போது சிவாங்கிக்கு பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய படம் தான் ஆர்டிகிள் 15 ஆகும்.இந்தப்படமானது கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.இதில் ஆயுஷ்மான்,குரானா,நாசர்,இஷா தல்வார் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.இந்த படத்திற்கு பாலிவுட்டியில் பெருமளவு வரவேற்பு கிடைத்தது.அதனைத்தொடர்ந்து இப்படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார்.அதனைத்தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமெக் செய்யப்படுகிறது.

இதில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளார்.இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பானது பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவாங்கி நடிக்க உள்ளார்.அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் டான் படத்திலும் சிவாங்கி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையெல்லாம் தவிர்த்து வேறு படங்களிலும் சிவாங்கி நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடப்பதாக பேசி வருகின்றனர்.

Exit mobile version