விவசாயிங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கிசான் உதவித்தொகை,பயிர்க் கடன்,மானிய விலையில் உரம் மற்றும் விதை வழங்குதல் போன்ற அரசின் நடவடிக்கையில் விவசாயிகள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரி விவசாயிகளின் பயிர் கடன் 100% தள்ளுபடி செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் ஏழை விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதர் தொண்டமாநத்தம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட 13 கோடி ரூபாய் கடனில் முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் கடன் தீபாவளிக்கு முன்பாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் புதுச்சேரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த மகிழ்ச்சிடைந்துள்ளனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீபாவளி பரிசு குறித்த அறிவிப்பை எப்பொழுது வெளியிடுவார் என்ற அறிவிப்பை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.