அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!! அறிவியல் நகரம் விருது அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் அறிவியல் சார்ந்த அறிவுகளை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உயர்கல்வி துறை சார்பாக அறிவியல் நகரம் தொடங்கப்பட்டது. இந்த நகரம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டது. அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.
அதில் சிறந்த மூத்த அறினர்களின் பங்களிப்பை பாராட்டி அவர்களுக்கு விஞ்ஞானிகள் விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு இளைய விஞ்ஞானிகள் விருதும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிராமப்புற கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியார் விருதுகளும் வழங்கப்பட்டது.
மேலும் சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் ஒரு அறிவிப்பை வெளிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் சமூக அறிவியல் ஆசிரியர்கள் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், மாணவர்களின் அறிவை வடிவமப்பைது, கற்றல் மீதான ஆர்வத்தை வளர்ப்பது உங்கள் கையில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விருதுகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறந்த அறிவியில் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது. இந்த கல்வி ஆண்டில் 5 துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் , புவியியல் மற்றும் வேளாண் நடைமுறைகள். இதற்கு www. Sciencecitychennai.in என்ற இணையதள பக்கத்தை பயன்படுத்தி விண்ணபிக்கலாம். இதற்கு 14.09.2023ஆம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.