ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!

0
249
Jackpot for retired government employees.. No more entitlement for them? Be ready to apply!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!

திமுக ஆட்சிக்கு வந்து முக்கிய ஐந்து அம்ச அறிக்கைகளில் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கலைஞர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சில கட்டுப்பாடுகளை வரையறுத்து இவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

மேற்கொண்டு தகுதியானவர்கள் பலருக்கும் இந்த திட்டம் கிடைக்கவில்லை. தற்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வந்ததையொட்டி மறுவாழ்வு மையத்தில் இருக்கும் பெண்களுக்கும் இத்திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறினர். அதேபோல இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று கிடைக்காமல் இருப்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.மேற்கொண்டு இந்த தேர்தலில் அரசு பணியில் இருப்பவர்களின் ஒட்டு இவர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

இதனால் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற கணவன்களின் அவர்களது மனைவிகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசனை செய்வதாவும் தகவல்கள் வெளிவந்தது.மேற்கொண்டு அவர்களுக்கும் வழங்குவது குறித்து தகவல்கள் வெளிவரலாம்.

தற்பொழுது கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கு புதிய விண்ணப்ப படிவம் அச்சடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த பணியானது  நிறைவு பெற்ற பிறகு பெண்களுக்கு இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படும் இன்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.