Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மானியம் வழங்கப்படும் வேளாண் பட்ஜெட்டில் வெளிவந்த தகவல்!

Jackpot hit for these farmers! The information released in the subsidized agricultural budget!

Jackpot hit for these farmers! The information released in the subsidized agricultural budget!

இந்த விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மானியம் வழங்கப்படும் வேளாண் பட்ஜெட்டில் வெளிவந்த தகவல்!

2023 24 ஆம் ஆண்டுக்கான  முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணி அளவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட் காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டை கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று 2023-24 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், உரம் மானியம், கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் கடன், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம் போன்ற பல முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறுகையில் ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு விவசாயிகளுக்கு மானியம் வழங்க 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிதியின் மூலம் ஆதிதிராவிடர் பழங்குடியின சிறு விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version