Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடுத்து அடிக்க உள்ள  ஜாக்பாட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் கால் பதிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பல்வேறு தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் சிவகார்த்திகேயன்.

தற்போது இவர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு கடும் போட்டியாக இருந்து வருகிறார்.சின்னத்திரையில் இருந்த போதே பல்வேறு தரப்பு மக்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற இவர் தனது பன்முகத் தன்மையின் காரணமாக பசங்க படத்தை இயக்கிய பாண்டியராஜன் மூலம் மெரினா என்ற படத்தில் முதன் முதலில் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தனது கடின உழைப்பாலும் முயற்சியினாலும் அயராத நம்பிக்கையினாலும்  தற்போது மிகப் பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். துல்கர் சல்மான், ரீத்து வர்மா, ரக்சன் போன்ற பல பிரபலங்கள் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தான் தேசிங் பெரியசாமி. இப்படமே அவருக்கு முதல் படம் ஆகும்.ஆனால் இவர் தனது முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் போன்ற பல்வேறு பிரபல இடம் இருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மேலும்  தேசிங் பெரியசாமி தனது அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை மனதில் வைத்துக்கொண்டு அவருக்காகவே பிரமாண்டமாக கதை ஒன்றை தயாரித்து கொண்டிருக்கிறாராம்.ஃபுல் ஸ்கிரிப்ட் வேலையையும் முடித்தபிறகு சிவகார்த்திகேயனிடம் கதையை சொல்லி ஒப்புதல் பெற்று படத்திற்கான முழு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளாராம் தேசிங்கு பெரியசாமி.இது சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம்.  தேசிங் பெரியசாமி-சிவகார்த்திகேயன் கூட்டணி வைத்தால் அந்த படம் நிச்சயமாக வெற்றியாக அமையும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இது சிவகார்த்திகேயனின் அதிகப்படியான  கடின உழைப்பிற்கும் கிடைத்த ஜாக்பாட் என்றே கூறலாம் .ரசிகர்கள் இந்த படத்தினை பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Exit mobile version