மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசு கொடுக்கும் ரூ 1000 கிடைக்க இதை உடனே செய்யுங்கள்!!
தமிழ்நாடு,கல்வி வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.மாணவ,மாணவிகள் தங்கு தடையின்றி கல்வி கற்றிட மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.இதில் அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி தொடரும் மாணவிகளுக்கு “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதனால் பெண் குழந்தைகளின் உயர்கல்வி சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடர உள்ள 3,28,000 மாணவர்களுக்கும்,8 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்து ITI செல்ல உள்ள மாணவர்களுக்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.அதன்படி வருகிகின்ற ஆகஸ்ட் 09 அன்று கோவை மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் அட்டை
2)ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு நகல்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சாதி,மதம் பொருளாதாரம். சமுதாயச் சூழல் என்று,இது எதுவுமே ஒருவர் கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது.இதுதான் என்னுடைய எண்ணம்.கல்விதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து, இதைத்தான் நாள் தொடர்ந்து மாணவர்களிடம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.*படிப்பு படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்கவேண்டும்.அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக,இதுவரைக்கும்,அரசுப் பள்ளியில் படித்து,உயர்கல்விக்கு வரக்கூடிய மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்.அந்தத் திட்டத்தின்கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
அடுத்து,இதுபோல மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டத்தை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் நாள் கோவையில் நான் தொடங்கி வைக்கப் போகிறேன்.படிப்புடன் சேர்த்து பல்வேறு தனித்திறமைகளையும் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில்தான் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.நம்முடைய திராவிட மாடல் அரசு ஏற்படுத்தித் தருகின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேறவேண்டும். இவ்வாறு தனது அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.