Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

Jackpot won by working women.. Tamil Nadu government's strange action

Jackpot won by working women.. Tamil Nadu government's strange action

பணிபுரியும் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை!!

தமிழக அரசு மக்களுக்கு உதவும் வகையில் பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் பெண்களுக்குரிய கட்டணமில்லா பேருந்து பயணம், உயர் கல்வி படிக்கும் பெண்மணிகளுக்கு மாதம் ஆயிரம், பொருளாதார ரீதியாக மேம்பட வேண்டும் என எண்ணி குடும்ப பெண்மணிகளுக்கு கலைஞர் உரிமைத்தொகை மூலம் ஆயிரம் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.அதுமட்டுமின்றி மகளிர் உரிமைத் துறை மூலம் வெளியூர்களிலிருந்து தங்கி வேலை செய்யும் பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதியையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த விடுதியானது திருச்சி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், ஓசூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ள பகுதிகளில் உள்ளது.இந்த விடுதிகள் மூலம் கிட்டத்தட்ட 432 பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.அதேபோல தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள விடுதிகளையும் கூடுதல் வசதிகளோடு மேம்படுத்தப்பட்டுள்ளது.குறைந்த கட்டணத்தில் இந்த விடுதியில் தங்கும் பெண்கள் அனைவருக்கும் இலவச இணைய சேவை,இன்வெர்ட்டர் போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி பெண்மணிகளின் பாதுகாப்பை கருதி கண்காணிப்பு கேமரா, பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவு உள்ளிட்டவையையும்  செயல்படுத்தியுள்ளனர்.சமூக நலத்துறையின் கீழ் ஒன்பதிற்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.இந்த விடுதிகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் ஏதுமில்லை.மேலும் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி வேலை செய்யும் பெண்மணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு பெண்களுக்கு பயன்படும் வகையில் சமூக நலத்துறையானது மேம்பாட்டு வசதிக்காக அந்த விடுதிகளை தமிழக மகளிர் உரிமைத் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இதன் மூலம் கூடுதல் பெண்கள் பயன்பெறுவர்.

 

Exit mobile version