Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவில் அதிருப்தியில் உள்ள அடுத்த பிரமுகர்! வெளியான அதிரடி விளக்கம்

சமீபத்தில் திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து தற்போது திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக திமுகவின் எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைவதாக வெளியான தகவலையடுத்து அவரை திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கி அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகவும், தான் உயர்பதவிகளை அடையவிடாமல் பலர் தடுத்ததாகவும் சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு கு.க.செல்வம் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திமுகவின் எம்.பியான ஜெகத்ரட்சகன் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் ‘நான் திமுக மீது அதிருப்திலும் இல்லை, பிரதமரை சென்று சந்திக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் தொடர்ந்து என் மீது சமூக வலைதளங்கள் மூலமாக வதந்தி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version