Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!

 

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…

 

பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக நேற்று(ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

உலகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் 1200 திரையரங்குகளில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

 

இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 10) வெளியான ஜெயிலர் முதல் நாளில் உலக அளவில் சுமார் 95.78 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் 59.12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 2023 ஆண்டில் சிறப்பான துவக்கத்தை கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது.

 

முதல் நாளில் ஜெயிலர் திரைப்படத்தின் வசூல்…

 

தமிழ்நாடு – 29.78 கோடி ரூபாய்

 

ஆந்திரம் மற்றும் தெலுங்கானா – 12.04 கோடி ரூபாய்

 

கர்நாடகா – 11.92 கோடி ரூபாய்

 

கேரளா – 5.38 கோடி ரூபாய்

 

வெளிநாடு – 32.75 கோடி ரூபாய்

 

Exit mobile version