ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

0
135

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல்! ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் திரைப்படததில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா ஆகிய மொழி சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

 

ராக்ஸ்டார் அனிருத் இசையில் சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் அவர்களின்.தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த தகவலை ஜெயிலர் படக்குழு அறிவித்துள்ளது.

 

ஜெயிலர் திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே நடிகை தமன்னா அவர்களின் ஆட்டத்தில் காவாலா படல் வெளியாகி உலக அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. இதையடுத்து கடந்த ஜுலை 12ம் தேதி ஜெயிலர் திரைப்படம் குறித்து முக்கிய தகவல் வெளியானது. அதில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பும் வெளியாகும் தேதியும் ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என்று நேற்று (ஜூலை13) ஒரு சிறிய புரோமோவுடன் அறிவித்துள்ளது.

 

ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கு “ஹூக்கும்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது சிங்கிள் பாடல் ஜெயிலர் திரைப்படத்தின்.முதல் பாடாலன காவாலா பாடலை விட சுமாராகத்தான் இருக்கும் என்று இந்த புரொமோவை பார்க்கும் பொழுது தெரிகிறது.

 

இருந்தாலும் இரண்டாவது பாடல் முழுமையாக வெளியாகி அதை கேட்டால்தான் பாடல் எப்படி இருக்கின்றது என்று நமக்கு தெரியும். மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் முதல் பாடலான காவாலா பாடல் செய்த சாதனைகளை முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.