Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!!

#image_title

சிறைவாசிகள் வீடியோ கால் மூலம் பேசலாம்- அமைச்சர் ரகுபதி!!

சிறைவாசிகளுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கிழ்ழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர்.

சிறைவாசிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், சிறைவாசிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை , மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் ர்ன உயர்த்தி வழங்குவதோடு, வீடியோ கால் மூலம் பேசும் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும், சிறைவாசிகளுக்கு தற்போது வழங்கப்படும் உணவுமுறை கூடுதல் செலவுடன் மாற்றி அமைக்கப்படும், சிறைவாசிகளால் தயாரிக்கப்படும் சிறைச் சந்தை பொருட்களை Freedom என்ற குறியீட்டு பெயரில் தமிழ்நாடு காவலர் அங்காடியில் விற்பனை செய்யப்படும் என அறிவித்தார்.

Exit mobile version