உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது? 

0
174
Jaljeera drink that gives freshness to the body! How to prepare this?
உடலுக்கு புத்துணர்ச்சியை அள்ளித் தரும் ஜல்ஜீரா பானம்! இதை எப்படி தயார் செய்வது?
தற்பொழுதைய காலத்தில் அனைவருக்கும் புத்துணர்ச்சி என்பது நிமிடத்திற்கு நிமிடம் தேவைப்படும் ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்பவர்கள், வெளியில் செல்பவர்கள் என்று அனைவரும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அந்தந்த வேலை சரியாக நடக்கும்.
புத்துணர்ச்சியாக இல்லாமல் நாம் சோர்வுடன் எடுக்கும் அனைத்து காரியங்களும் தடைபட்டு போகும். புத்துணர்ச்சி என்றாலே ஒரு சிலருக்கு நியாபகம் வருவது டீ அல்லது காபி. இந்த டீ அல்லது காபிக்கு பதிலாக ஜல்ஜீரா பானம் தயார் செய்து குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் எடுத்த செயல்களை எளிமையாக செய்து முடிக்கலாம். இந்த ஜல்ஜீரா பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* புளிச் சாறு
* சீரகப் பொடி
* இஞ்சி சாறு
* எலுமிச்சை சாறு
* உப்பு
* புதினா இலைகள்
செய்முறை:
முதலில் ஒரு புளியை கரைத்து ஒரு டம்ளர் அளவு புளி கரைசல் தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் கால் ஸ்பூன் அளவு சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் அளவுக்கு இஞ்சி சாறு, ஒரு ஸ்பூன் அளவுக்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம்.
ஜல்ஜீரா பானம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டுமில்லாமல் பசியை தூண்டுகிறது. செரிமானப் பிரச்சனையை சரி செய்கின்றது. மேலும் உடலை நன்கு நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் உதவி செய்கின்றது.