ஜல்லிக்கட்டு விவகாரம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை அடையாளமாக தான் ஜல்லிக்கட்டு விளையாடப்படுகின்றது.உச்சநீதிமன்றத்தில் விவாதங்கள் அனைத்தும் காரசாரமாக நடைபெற்றது.பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் முன்வைத்த வாதங்கள் பலவற்றை நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும் நீதிபதிகள் ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு தான் அதனால் மாடுகள் கொடுமை படுவதில்லை எனவும் குறிப்பிட்டனர்.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.அந்த வழக்கு கடந்த சில தினங்களாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு குறித்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.