ஜல்லிக்கட்டு விவகாரம்! கால் நடை பராமரிப்பு துறை வெளியிட்ட தகவல்!
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இருப்பது ஜல்லிக்கட்டு போட்டி.இந்த போட்டியானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக உள்ளது.தமிழரின் வீரங்களுக்கு எடுத்து காட்டாக உள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம் அதற்கு அடுத்த நாள் பாலமேடு,அதன் பிறகு அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்.
மேலும் இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதும்.இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியினால் மாடுகளை துன்புறுத்துவதாகா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு விசாரணை நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி,அனிருத்தா போஸ்,ரிஷிகேஷ் ராய், சி.டி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் தரப்பில் முதலில் வாதங்கள் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.அதில் ஜல்லிக்கட்டு என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டு அல்ல,காளைகளை காட்சிப்படுத்துபவர் அதை மிகுந்த அக்கறையுடனும் ,பாதுகாப்புடனும் பராமரித்து வருகின்றனர்.அதனால் இந்த விளையாட்டை முற்றிலும் பொழுது போக்கு என கூற முடியாது என தெரிவித்தனர்.
மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநிலம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை தொடங்கினார்.அப்போது தமிழக அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்கள்.
இந்த விளையாட்டானது சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பாரம்பரியமாக விளையாடப்படுகின்றது என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வழக்கு கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.அப்போது இறுதி வாதம் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.