அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் வெளியீடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!
தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை,அலங்காநல்லூர்,அவனியாபுரம்,பாலமேடு போன்ற இடங்களில் நடைபெறுவது வழக்கம் தான்.அவ்வாறு நடத்தப்படும் போட்டிகளில் பங்கு பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் காளைகளுக்கு முறையாக சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.மேலும் காளைகளுக்கு மூன்றரை வயது நிரம்பி இருக்க வேண்டும்.போட்டிக்கு முன்பாக கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். போட்டி நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்,பெயர் ,வயது சான்றிதழ்,பாஸ்போர்ட் அளவிலான புகைபடம் போன்றவற்றை பதிவு செய்வது கட்டாயம்.
இதற்காக காளைகள்,மாடுபிடி வீரர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை நேற்று பிற்பகல் முதல் தொடங்கியது.இந்த போட்டியில் பங்கேற்க விரும்புவோர் நாளை மாலை 5 மணி வரை அனுமதிக்கபடுவார்கள்.இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் அலங்காநல்லூர்,பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கு கூடுதலாக நேரம் வழங்கப்படாது என தெரிவித்துள்ளனர்.